அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
x
ராஜினாமா கடிதத்தை ஏற்க கர்நாடக சபாநாயகர் காலத் தாமதம் செய்வதாகவும், விரைந்து முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரியும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறை​க்குள் ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், வழக்கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களை பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். 

"எனது கட்சிக்காரர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது"

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக, அவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்