தபால் துறை தேர்வு விவகாரம் : அதிமுக , திமுக எம்பிக்கள் அமளி

தபால் துறை தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுக , திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
தபால் துறை தேர்வு விவகாரம் : அதிமுக , திமுக எம்பிக்கள் அமளி
x
அண்மையில் நடத்தப்பட்ட  தபால் துறை தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் இன்றும் பிரச்சினை எழுப்பினர். இது தொடர்பாக அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விவாதம் நடத்த வலியுறுத்தினர். அதனை மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு ஏற்கவில்லை. இதனால் அதிமுக, திமுக எம்.பிக்கள் முழக்கம் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழுப்பம் ஏற்பட்டது. இதையடுத்த் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்