கூட்டத்தொடரின் போது அவைக்கு வராத அமைச்சர்கள் : அதிருப்தி அடைந்த பிரதமர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அவைக்கு வராத அமைச்சர்கள் மீது பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார்.
கூட்டத்தொடரின் போது அவைக்கு வராத அமைச்சர்கள் : அதிருப்தி அடைந்த பிரதமர்
x
பாரதிய ஜனதா கட்சி எம்.பிக்கள் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற  கூட்டத்தொடரின்போது, அமைச்சர்கள் முறையாக அவையில் இருப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருப்பதாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற கூட்டத்திற்கு வராத அமைச்சர்கள் விபரத்தை உடனடியாக தனக்கு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். பாரதிய ஜனதா கட்சி எம்.பி-க்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கான பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கியதுடன், சமூக பணிகள்தான் மக்கள் நினைவு கூறும் முதல் விஷயமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்