நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் - முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது என கர்நாடக முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் கேட்டு கொண்டுள்ளார்.
x
பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது என கர்நாடக முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் கேட்டு கொண்டுள்ளார். கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும், பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்