கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம்...

ராஜினாமா கடிதம் அளித்துள்ள கர்நாடகா காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த, அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டி.கே.சிவக்குமார் இன்று காலை மும்பை சென்றுள்ளார்.
கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம்...
x
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அதிருப்தி அடைந்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலில் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 6 ஆம் தேதி சபாநாயகர் அலுவலகத்தில் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு, அதன் நகலை அம்மாநில ஆளுநரிடம் அளித்தனர். 

இந்நிலையில், கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேசும் தமது பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆளுநரை சந்தித்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை அளித்துவிட்டு மும்பைக்கு சென்றுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க. வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மொத்தம் 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் தொடர்பாக முடிவெடுக்க 6 நாட்கள் தேவை என அறிவித்துள்ளார். இது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜினாமா கடிதம் அளித்துள்ள 13 பேரில் 5 பேர் தான் முறையாக கடிதம் அளித்துள்ளதாகவும், மற்ற 8 பேரும் மீண்டும் ராஜினாமா கடிதம் அளிக்கவும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவுறுத்தி உள்ளார். முறையாக கடிதம் கொடுத்தவர்கள் வரும் 12 மற்றும் 15 ஆம் தேதிகளில் தம்மை சந்திக்க வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ராஜினாமா கடிதங்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில், நியாயமானதாக இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்ளப்படும் என சபாநாயகர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்