பட்ஜெட் 2019 - முக்கிய சாராம்சங்கள்

நாட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, முதல் பெண் நிதி அமைச்சராக தனிப் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன், தமது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் 2019 - முக்கிய சாராம்சங்கள்
x
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி முறை, புதிய இந்தியாவிற்கு அடித்தளமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக வளரும் என்றும், உலக அளவில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். இன்னும் சில ஆண்டுகளில், இந்தியா 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும் எனவும் பத்தாயிரம் புதிய விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்கு இந்திய இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள் எனவும் பெண்கள் மேம்பாட்டிற்கு தனித்திட்டம் உருவாக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்திய பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவதை ஊக்கப்படுத்தும் வகையில் "இந்தியாவில் படிப்போம்" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்