11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
x
கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கைக் கோரும் தீர்மானத்திற்கு எதிராக, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேர் வாக்களித்தனர். இதில், எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை பெற்று ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த 11 அதிமுக எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கோடு 3 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்