ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாளின் உடல் நல்லடக்கம்

இறுதி சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு
ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாளின் உடல் நல்லடக்கம்
x
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் தாயாரும், மறைந்த  ஜி கே மூப்பனாரின் மனைவியுமான கஸ்தூரி அம்மாள் உடல்நலக்குறைவால்  சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. மறைந்த கஸ்தூரி அம்மாளின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கஸ்தூரி அம்மாளின் உடல் அவரது சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்