தி.மு.க.வில் இன்று இணைகிறார் தங்கதமிழ் செல்வன்?

காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ச்சி என தகவல்
தி.மு.க.வில் இன்று இணைகிறார் தங்கதமிழ் செல்வன்?
x
அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்த தங்க தமிழ் செல்வன், ஸ்டாலின் முன்னிலையில், இன்று காலை 11 மணிக்கு தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவரது ஆதரவாளர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க.-வில் முறைப்படி இணைய உள்ள தங்கதமிழ்ச் செல்வன், விரைவில் தேனியில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்தவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தங்க தமிழ்ச் செல்வனுக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தங்க தமிழ்ச் செல்வன் வரவால், தேனி மாவட்டத்தில் தி.மு.க. வளர்ச்சி அடையும் என்ற குரலும் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்