இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
x
வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன், ஜூகாலிஜியும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதை எதிர்த்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் வழக்காக பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்