தினகரனை விட்டு விலகுகிறாரா தங்க தமிழ்செல்வன்?
பதவி, அதிகாரம் இல்லையென்றால் அரசியலில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியாது என்பதை தங்க தமிழ்செல்வனும் உணர்ந்து விட்டார் என்பதையே, அவரது நடவடிக்கை காட்டுவதாக அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அப்படி என்ன நடவடிக்கை தான் தங்கதமிழ் செல்வன் எடுத்தார்.
தேனி மாவட்டம் நாராயணத்தேவன் பட்டியை சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன் சென்னை பல்கலை.யில் எம்.ஏ படித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த தங்கதமிழ்செல்வன், சசிகலாவின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.
2001 -ல் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவின் மாற்று வேட்பாளராக களமிறங்கிய தங்கதமிழ்செல்வன் வெற்றி
தனக்காக, பதவியை ராஜினாமா செய்த தங்க தமிழ்செல்வனை மாநிலங்களவைக்கு அனுப்பி அழகு பார்த்தார் ஜெயலலிதா.
பன்னீர்செல்வம், தங்க தமிழ் செல்வன் இடையிலான இடைவெளி அதிகரிப்பு
2011 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து பேரவைக்கு தேர்வான தங்கதமிழ்செல்வன், மீண்டும் 2016- லும் சட்டப்பேரவைக்கு தேர்வானார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா பக்கம் நின்றார் தங்கதமிழ்செல்வன்.
தினகரன் தலைமையில் தனி அணி செயல்பட்ட போதும், அ.ம.மு.க. உருவான போதும், கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினார் தங்கதமிழ்செல்வன்.
ஜெயலலிதா, சசிகலாவுக்கு விசுவாசியாக இருந்தது போல, தினகரனுக்கு விசுவாசியாக செயல்பட்டவர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு, தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் தங்கதமிழ் செல்வன்.
Next Story
