நான் விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போவீர்கள் - தங்கத்தமிழ்செல்வன்

டிடிவி தினகரனை திட்டியதாக வெளியான ஆடியோ தவறானது என தங்கதமிழ் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
நான் விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போவீர்கள் - தங்கத்தமிழ்செல்வன்
x
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின், தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் தங்கதமிழ்செல்வன், அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்கதமிழ்செல்வன், தினகரன் செயல்பாடுகள் மீது தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதனிடையே தினகரன் உதவியாளரிடம், அவர் பேசுவது போல் வெளியான ஆடியோ ஒன்று,  அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில், இந்த மாதிரி அரசியலை, தினகரன் உடனே நிறுத்த வேண்டும் என்றும், இதே நிலை நீடித்தால் அவர் தோற்றுப்போவார் எனவும் கூறியுள்ளார். மேலும்,  நான் விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போய்விடுவீர்கள் என்றும், அவர் அந்த ஆடியோவில் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அமமுக நிர்வாகிகள் கூறும் போது, தேனி மாவட்டத்தில், அமமுக நிர்வாகிகள் சிலர் ரகசிய கூட்டம் நடத்தியதால், தங்கதமிழ்ச்செல்வன், கோபத்தில் இப்படி பேசியிருக்கலாம் என தெரிவித்தனர்.  தற்போது கேரளாவில் இருப்பதாக கூறப்படும் தங்கதமிழ்செல்வனிடம், தொலைபேசி மூலம் நாம் தொடர்பு கொண்ட போது, தான் பேசியதாக வெளியான ஆடியோ, தவறானது என்று மறுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்