புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தல்

மத்திய அரசின் சட்ட திட்டங்களை நிறைவேற்றாத புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தல்
x
மத்திய அரசின் சட்ட திட்டங்களை நிறைவேற்றாத புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ கல்லூரிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்டதிருத்தத்தை மத்திய அரசு  கொண்டு வந்து அமுல்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.  இதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பயன்படுத்தி 10 சதவிகித இடங்களை அதிகரித்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் புதுச்சேரி அரசு இதற்கான விருப்ப மனுவை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் புதுச்சேரி அரசு மாணவர்களை வஞ்சித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்