ராகுல் காந்தி பதவி விலக விரும்பினால் கட்சியை சரியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும் - வீரப்ப மொய்லி
பதிவு : ஜூன் 08, 2019, 02:32 PM
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக விரும்பினால் கட்சியை சரியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்கட்யின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கோரிக்கை வைத்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளரிடம் பேசிய அவர் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஒழுங்கமின்மை அதிகரித்து வருவதாக கூறினார். தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்டாலும், தற்போது வரை கட்சியின் தலைவராக அவர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி உறுதியான தலைவர் என கூறியுள்ள வீரப்பமொய்லி, தலைவர் பதவியில் இருந்து அவர் விலகும் பட்சத்தில் கட்சியை மறுசீரமைப்பு செய்து விட்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நேர்மையான, சரியான நபரிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வீரப்ப மொய்லியின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.

0 views

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேச பிரபல ரவுடி விகாஷ் தூபே கைது

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஷ் தூபே மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

9 views

இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

டெல்லியில் மேலும் 2033 பேருக்கு கொரோனா - 24 மணி நேரத்தில் 48 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்தில் 33 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

48 views

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் குடியேறிய,ஏழைகளுக்கு வாடகை வீடுகள் கட்டித்தர திட்டம்- பிரகாஷ் ஜவடேகர்

இந்தாண்டு நவம்பர் மாதம் வரை 81 கோடி மக்களுக்கு, மேலும் 3 மாதத்திற்கு, இலவச அரிசி,பருப்பு, கோதுமை மற்றும், நகர்புறங்களில் குடியேறிய ஏழைகளுக்கு, வாடகை வீடுகள் கட்டித்தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

103 views

"பொருளாதார அழுத்தத்தில் சிறு, குறு, பெரிய நிறுவனங்கள்" - பா.ஜ.க. மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அழிவின் விளிம்பில் சிறு குறு நிறுவனங்கள் உள்ளதாகவும், பெரிய நிறுவனங்கள் மிகப் பெரிய அழுத்தத்தில் உள்ளதாகவும், வங்கிகளின் நிலை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.