அமைச்சர்கள் தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கான ஓட்டு விகிதம் பெருமளவில் சரிவு?

17-வது நாடாளுமன்ற தேர்தலில், அமைச்சர்கள் தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கான ஓட்டு விகிதம் பெருமளவில் சரிந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமைச்சர்கள் தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கான ஓட்டு விகிதம் பெருமளவில் சரிவு?
x
 நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 13 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.கவின் ஓட்டு, 10 சதவீதம் முதல் 20 சதவீதம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அமைச்சர்கள் ஜெயக்குமாரின் ராயபுரம் தொகுதியில் 30 சதவீதமும், திண்டுக்கல் சீனிவாசன் தொகுதியில், 34 புள்ளி ஐந்து ஒன்பது சதவீதமும்,  அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியில் 20 முதல் 30 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் சட்டமன்ற தொகுதிகளில் 10 சதவீத ஓட்டுக்கள் சரிந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஓட்டு மொத்தமாக கணக்கிடும் போது, போடிநாயக்கனூர் தவிர, மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், எதிர்க்கட்சியைவிட அ.தி.மு.க பெற்ற ஓட்டுக்களின் எண்ணிக்கை மிகவும் பின்தங்கியே காணப்படுவதாக தெரிகிறது.  தனித்து நின்ற போது, கிடைத்த ஓட்டுக்கள் கூட, கூட்டணியாக நின்ற போது அ.தி.மு.கவுக்கு கிடைக்கவில்லை என்பதே அந்த கட்சியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்