காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி மட்டுமே பேசப்பட்டது - காங்கிரஸ்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி மட்டுமே கட்சி காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட்டதாக
காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி மட்டுமே பேசப்பட்டது - காங்கிரஸ்
x
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி மட்டுமே கட்சி காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட்டதாகவும், தேவையற்ற வதந்திகள், யூகங்களை பரப்ப வேண்டாம் என்றும் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ''தேர்தல் முடிவு மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து மட்டுமே காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும், ஆனால், ஊடகங்களில் பல்வேறு யூகங்களும், வதந்திகளும் பரவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு கட்சியில் மாற்றங்களை செய்ய முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே, ஊடகங்களும், மற்றவர்களும் அதற்கு மதிப்பளிக்க முன்வர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் தொடர்பாக பரவி வரும் தகவல்கள் துரதிருஷ்டவசமானது என்றும் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்