இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...
x
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.   இந்நிலையில்  பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் டெல்லி  நட்சத்திர ஓட்டலில் இன்று  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்கின்றனர்.  ராமதாஸ், பிரேமலதா  விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர்  கலந்துகொள்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்