தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வரும் 23 ஆம் தேதி மக்கள் முடிவு தெரிந்து விடும் அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
நாட்டின் பொதுத் தேர்தல் முடிவடைய உள்ள 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பு பிரதமர் செய்தியாளர்களை சந்திப்பது ஆச்சரியமாக உள்ளதாகவும், முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை பிரதமர் நடத்துவது முற்றிலும் எதிர்பாராத நிகழ்வு என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23 ஆம் தேதி மக்கள் முடிவு தெரிந்து விடும், அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக அமைந்து  இருந்ததாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, மோடி தான் என்ன பேச வேண்டுமோ அதனை எவ்வித தடையுமின்றி பேசியதாகவும், ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அவ்வாறு செயல்பட ஆணையம் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டினார். மோடி பிரசாரம் செய்ய ஏதுவாக பொதுத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அமைத்திருந்ததாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பா.ஜ.க. மற்றும் மோடி அளவுக்கு அதிகமான பணத்தை கொண்டிருந்ததாகவும், காங்கிரஸ் உண்மையை மட்டும் நம்பி மக்களை சந்தித்ததாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார். கடந்த தேர்தலில் குறைந்த அளவில் வெற்றி பெற்ற நிலையிலும்,  ஒரு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக கூறுவதில் பெருமைபடுவதாக ராகுல் காந்தி கூறினார்.நரேந்திர மோடி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மரியாதை உள்ளது என்றும், அவரது குடும்பத்தை பற்றி தாம் விமர்சிக்க விரும்பவில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். மோடி விருப்பப்பட்டால் தமது குடும்பத்தை பற்றி விமர்சித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். முதல் முறையாக பிரதமர் செய்தியாளர்களை சந்தித்த நேரத்திலேயே, ராகுல் காந்தியும் செய்தியாளர்களை சந்தித்ததால் பரபரப்பான நிலை உருவானது

Next Story

மேலும் செய்திகள்