6-வது கட்ட தேர்தல் - இன்று பிரசாரம் ஓய்வு

நாடாளுமன்ற தேர்தலில் 6-வதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 59 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
6-வது கட்ட தேர்தல் - இன்று பிரசாரம் ஓய்வு
x
நாடாளுமன்றத்துக்கான 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 118 தொகுதிகளுக்கு இன்னும் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில், 59 தொகுதிகளில், 6வது கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் மே 12ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பிரபலங்கள், 6வது கட்ட தேர்தலில் களத்தில் உள்ளனர். தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்