"சுற்றுலாவுக்கு ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பலை பயன்படுத்திய ராஜிவ்" - பிரதமர் மோடி கடும் தாக்கு

ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பலை ராஜீவ் குடும்பத்தினர் உல்லாச சுற்றுலாவுக்கு பயன்படுத்தியது தேசிய பாதுகாப்பில் செய்து கொண்ட சமரசம் இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்
சுற்றுலாவுக்கு ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பலை பயன்படுத்திய ராஜிவ் - பிரதமர் மோடி கடும் தாக்கு
x
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், ராஜீவ் குடும்பத்தினர் தீவுக்கு சுற்றுலா சென்ற போது 10 நாட்களுக்கு மேல் விராத் போர்க்கப்பல்
அந்த தீவில் நிறுத்தப்பட்டு இருந்தது  என குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் 4ஆவது தலைமுறை வாரிசுகளை நாடு பார்ப்பதாக கூறிய பிரதமர், இந்த வாரிசு அரசியல் கலாச்சாரம் காங்கிரஸ் குடும்பத்துக்கு மட்டும் உடையது அல்ல என்றும் காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கும் பிற கட்சிகளும் அதை பின்பற்றுவதாகவும் மோடி விமர்சித்தார். தான் பிரதமரான பிறகு தன்னுடன் பாதுகாவலர்கள் வருவதால் மக்கள் தடுக்கப்பட்டு, தாமதமாக வீடு செல்ல நேரிடுவதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்