நாடாளுமன்ற ​தேர்தலின் 4வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

4வது கட்ட தேர்தல் நடைபெறும் 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில், நேற்று பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடாளுமன்ற ​தேர்தலின் 4வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
x
மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இதேபோன்று, பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காங்கிரஸ் சார்பில் நடிகை ஊர்மிளா, பிரியா தத், பாஜக சார்பில் பூனம் மகாஜன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், உன்னாவ் தொகுதியில் பாஜக சார்பில் சாமியார் சாக்ஷி மகராஜ் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர்.இதேபோல், ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் என ஏராளமான பிரபலங்களின் வாரிசுகள், 4ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் களத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்