வசந்தி ஸ்டான்லியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்

கவிஞர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் வசந்தி ஸ்டான்லி என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம்.
x
திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லியின் உடலுக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு வசந்தி ஸ்டான்லியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.  தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், கவிஞர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் என வசந்தி ஸ்டான்லிக்கு புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்