4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.
x
முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது பொதுமக்களிடம் பேசிய செந்தில்பாலாஜி ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ.வும் எம்.பி.யும் ஒரே கூட்டணியில் இருந்தால் தான் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று கூறினார். இடைத் தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்