பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என விமர்சித்த விவகாரம் : ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்

ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என ராகுல்காந்தி கூறி வருவதாக, பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என விமர்சித்த விவகாரம் : ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்
x
ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை  திருடன் என ராகுல்காந்தி கூறி வருவதாக, பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு, பதிலளிக்க மனுதாரர் மீனாட்சி லேகி கால அவகாசம் கோரியுள்ளார். இந்நிலையில் மோடி மீதான தமது விமர்சனத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், உச்சநீதிமன்றத்தை மேற்கோள் காட்டி பேசியதாக கூறப்படுவதற்கு மட்டுமே தாம் மன்னிப்புக்கோருவதாகவும் ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பதிலில் திருப்தி அடையாத நிலையில், ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ரபேல் தொடர்பான சீராய்வு மனு உடன் சேர்த்து, ராகுல் காந்திக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்