வாரணாசியில் மோடிக்கு எதிராக ஷாலினி யாதவ் போட்டி

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.
வாரணாசியில் மோடிக்கு எதிராக ஷாலினி யாதவ் போட்டி
x
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார். கடந்த 2017-ம் ஆண்டில் வாரணாசி மேயர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில், நேற்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த ஷாலினி யாதவிற்கு வாரணாசி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை முன்னாள் துணை தலைவரான ஷ்யாம் லால் யாதவின் மருமகள் ஷாலினி யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்