வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்

மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள், அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்
x
* மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாலையில் உள்ளே நுழைந்து , வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வதில்  ஈடுபட்டிருக்கிறார்கள்  என்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிதுள்ளார். 

* மதுரை மருத்துவ கல்லூரியில் உள்ள ஆறு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு , ஒவ்வொரு அறையும் சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் இருக்கும் போது, அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததும்,  முறைகேடுகள் செய்ததும்  பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தமிழகத்தில் மூச்சு திணறி நிற்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு  மேல் உள்ள நிலையில்,  வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்கு
பதிவு இயந்திரங்கள்  பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

* அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துணை ராணுவத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும்  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்