அமமுக-வால் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆடுதுறையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
x
அமமுக வேட்பாளர்களால் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கடந்த காலத்தில் செல்லாத ஓட்டுகள் எவ்வளவு விழுந்ததோ அதுதான் தினகரன் பெறப்போகும் வாக்கு என்றும் அவர் தெரிவித்தார். வாரிசு அரசியல் என்பது காங்கிரஸ் திமுகவில் இருப்பது போன்றது என்ற அவர் தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது மகன் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவது வாரிசு அரசியல் அல்ல என்றார்.

Next Story

மேலும் செய்திகள்