ஆ.ராசாவுக்கு ஆதரவாக வைகோ பிரசாரம்

22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆ.ராசாவுக்கு ஆதரவாக வைகோ பிரசாரம்
x
22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ ராசாவுக்கு ஆதரவாக, வைகோ, சத்தியமங்கலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்த அவர், ஜிஎஸ்டி வரி விதிப்பால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு மூன்று முறை வரும் பிரதமர் மோடி கஜா புயலின்போது 89 பேர் உயிரிழந்தபோது எங்கே போனார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுக கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும் என்றும் வைகோ கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்