கடன் ரூ.4 லட்சம் கோடியா...? - சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்

வேட்புமனுவில் தவறான தகவல் கூறியது என்? என பெரம்பூர் சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்.
x
சென்னை - பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மோகன்ராஜ் என்பவர், தமது வேட்புமனுவில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாகவும், கடன் 4 லட்சம் கோடி ரூபாய் என்றும் பதிவு செய்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும், தமிழக ஜனதா கட்சியின் தலை வருமான மறைந்த நெல்லை ஜெபமணியின் மகனான மோகன்ராஜ், "தந்தி டிவி"- க்கு சிறப்பு பேட்டி அளித்தார். வேட்புமனுவில், தவறான தகவலை வெளியிட்டது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த மோகன்ராஜ், வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு யோசனை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்