ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு..? - அமைச்சர் தங்கமணி

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.
x
ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட ஆலம்பாளையம், சின்னா கவுண்டனூர், அலமேடு, தாஜ் நகர் உள்ளிட்ட பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருக்கின்ற தி.மு.க.வினர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.  அவர்களுக்கு வாக்களித்தால் உங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? என்று தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் என்று அமைச்சர் தங்கமணி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்