"ஓட்டுக்கு பணம் கொடுத்தால், காட்டி கொடுப்பேன்" - கமல்ஹாசன்

வாக்குக்கு பணம் கொடுத்தால், தமது கட்சியினராக இருந்தாலும் காட்டிக்கொடுப்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
x
வாக்குக்கு பணம் கொடுத்தால், தமது கட்சியினராக இருந்தாலும் காட்டிக்கொடுப்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். வட சென்னையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், மூழ்குவதற்கு முன்பே நீதியை காப்பாற்ற வேண்டும் என்றார். மக்களுக்கான அரிய வாய்ப்பாக தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்ற அவர், தாம் தலைவனல்ல அன்றும் தலைவர்களை உருவாக்கும் தொண்டன் என்றும் கூறினார். தொடர்ந்து ஆர்.கே.நகர், காசிமேடு, திருவொற்றியூர், ஓட்டேரி பகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.  

Next Story

மேலும் செய்திகள்