19 நாட்கள் பிரசாரம் செய்கிறார் ராமதாஸ் : தருமபுரி தொகுதியில் 3 நாட்கள் பிரசாரம்

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், 19 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
19 நாட்கள் பிரசாரம் செய்கிறார் ராமதாஸ் : தருமபுரி தொகுதியில் 3 நாட்கள் பிரசாரம்
x
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், 19 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதுதொடர்பாக ராமதாசின் தேர்தல் சுற்றுப்பயண பட்டியலை, பாமக தலைவர் ஜி.கே.மணி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆரணி மற்றும் திருவண்ணாமலை தொகுதிகளில் இன்று தனது பிரசாரத்தை தொடங்கும் ராமதாஸ், ஏப்ரல் 2ந் தேதி கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீசை ஆதரித்து வாக்குசேகரிக்கிறார். தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடும் அவர்,  11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தருமபுரி தொகுதியிலும், ஏப்ரல் 14ந் தேதி சேலம் தொகுதியிலும் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்