அனில் அம்பானி, நீரவ் மோடிக்கு பிரதமர் மோடி காவலாளி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அனில் அம்பானி, நீரவ் மோடி ஆகியோரின் காவல்காரராக பிரதமர் மோடி திகழ்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.கூட்டத்தில் பேசிய அவர், தம்மை காவலாளி என கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி யாருடைய காவலாளி என, ஏன் கூற மறுக்கிறார் என்று,கேள்வி எழுப்பினார். விவசாயி,வேலையில்லா இளைஞர் இவர்களது வீட்டில்,காவலாளியை நாம் காண முடியுமா என்றும் ராகுல் கூட்டத்தினரை பார்த்து ராகுல்காந்தி வினவினார்.மேலும், அனில் அம்பானியின் வீட்டில் தான் காவலாளிகளை காண முடியும் என்றும் இவர்களுக்கு,பிரதமர் மோடி, மட்டுமே காவலாளி என்றும், ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்
Next Story