கடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன்? - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி

தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன்? என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
x
தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூரில் பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மகேந்திரன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில்  பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணி அமைத்திருப்பதை விரும்பாத ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருவதாக தெரிவித்தார். அதிமுகவை விமர்சித்த கட்சி  பாமகவுடன் கூட்டணி வைக்கலாமா? என்று கேட்கும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்த வைகோவுடன் தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்