திமுக கூட்டணி ஒவ்வாத கூட்டணி - ராஜேந்திர பாலாஜி

அதிமுக, தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
x
திமுக கூட்டணி ஒவ்வாத கூட்டணி, அதிமுக கூட்டணி தெய்வீகமானது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. இதில் பேசிய  ராஜேந்திர பாலாஜி, ராஜிவ் காந்தியோடு இந்திய காங்கிரஸ் முடிந்துவிட்டதாகவும், தற்போது இருப்பது இத்தாலி காங்கிரஸ் எனவும் விமர்சித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  திமுக தேர்தல் அறிக்கை வெற்று பேப்பரில் எழுதப்பட்ட அறிக்கை என விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்