ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டிய மக்கள்...

தருமபுரியில் இன்று அதிகாலை திமுக தலைவர் ஸ்டாலின் அங்குள்ள உழவர் சந்தை மற்றும் ஆவின் பாலகம் பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
x
தருமபுரியில் இன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், அங்குள்ள உழவர் சந்தை மற்றும் ஆவின் பாலகம் பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.  இரண்டு நாள் சுற்றுப் பயணமாக  தருமபுரி  சென்ற ஸ்டாலின், இன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டார். தான் தங்கி இருந்த விடுதியில் இருந்து புறப்பட்ட அவர், திமுக வேட்பாளர் மருத்துவர் செந்திலுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போது, ஸ்டாலினை பார்த்த பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். 


Next Story

மேலும் செய்திகள்