அதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்...?

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள்.
அதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்...?
x
புதுச்சேரி உட்பட மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இதுபோல பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி தொகுதி, ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை, 15 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், மீதமுள்ள 25ல் தேமுதிக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளுக்கு வழங்கும் தொகுதிகள் போக மீதம் உள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்