"அரசுப் பணத்தை ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்கும் மோடி" - ப. சிதம்பரம் கடும் விமர்சனம்

அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசுப் பணத்தை ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்கும் மோடி - ப. சிதம்பரம் கடும் விமர்சனம்
x
அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய ஜனநாயகத்தில் இது கறுப்பு நாள் என்றும், 5 ஆண்டுகளாக விவசாயிகளின் வாழ்வை சீரழித்து விட்டு, இப்போது 2 ஆயிரம் ரூபாய் வழங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், 5 பேர் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் என்பது பிச்சையா அல்லது லஞ்சமா என்று அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்