தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு பிப்ரவரி 25 முதல் விண்ணப்பங்கள் விநியோகம் - தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவிப்பு

தி.மு.க .சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு பிப்ரவரி 25 முதல் விண்ணப்பங்கள் விநியோகம் - தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவிப்பு
x
தி.மு.க .சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில்,  திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், வரும்  25-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விநியோகிக்கப்படும் என  கூறப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம் என்றும், விண்ணப்ப கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் இடம் பெற்றுள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் அதில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்