"காங். ஆட்சியில் ஊழல் போட்டி : பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சி போட்டி" - பிரதமர் மோடி பேச்சு

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி இருந்த நிலையில், தற்போது பாஜக ஆட்சியில், வளர்ச்சியில் போட்டி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
காங். ஆட்சியில் ஊழல் போட்டி : பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சி போட்டி - பிரதமர் மோடி பேச்சு
x
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக உச்சிமாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கடந்த காலம் நம் கையில் இல்லை, ஆனால் எதிர்காலம் உறுதியாக நம் கையில் தான் உள்ளது என்று தெரிவித்தார். 4ஆம் தொழில் புரட்சியில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியா வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, ஊழல் செய்வதில் அமைச்சகத்துக்கும், தனிநபர்களுக்கும் இடையே போட்டி இருந்த நிலையில், தற்போது இந்தியா, சுகாதாரத்தில் 100 சதவீதம் முழுமை பெறுமா இல்லை மின்சாரத்தில் முழுமை பெறுமா என்ற வளர்ச்சி போட்டியில் உள்ளதாகவும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தயக்கத்துக்கு பதில் நம்பிக்கையும், தடைகளுக்கு பதில் நேர்மறையும், சிக்கல்களுக்கு பதில் முயற்சிகளும் மாற்றமடைந்துள்ளதாக அவர் கூறினார். இந்தியாவின் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டு பேசும் போது, 10 லட்சம் கோடி டாலர் கொண்ட உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியாவை உயர்த்தும் முயற்சியில் உள்ளதாகவும், நடப்பாண்டின் இறுதிக்குள் உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார பலம் பொருந்திய நாடாக இந்தியா உருவாக உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்