கிரண்பேடியின் சம்மதத்தை அடுத்து நாராயணசாமி போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

புதுச்சேரி துணை நிலை ஆளுனரை கண்டித்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, தற்காலிமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
x
மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான 39 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கக்கோரி கடந்த புதன்கிழமை முதல் ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர்  தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் துணை நிலை ஆளுனர் கிரண்பேடி -  முதலமைச்சர் நாராயணசாமி இடையேயான பேச்சுவார்த்தை ஆளுனர் மாளிகையில் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை  கிரண்பேடி  பரிசீலிப்பதாக தெரிவித்ததாக கூறினார். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிமாக ஒத்தி வைப்பதாகவும் அவர் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்