"தமிழக அரசின் கடன் அதிகமாகி விட்டது" : குற்றச்சாட்டும்.. பதிலும்..

தமிழக அரசின் கடன் அதிகமாகி விட்டதாக, சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பொன்முடி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழக அரசின் கடன் அதிகமாகி விட்டது : குற்றச்சாட்டும்.. பதிலும்..
x
பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி பேசும் போது, கடந்த 2006 ஆம் ஆண்டு 57 ஆயிரத்து 457  கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன், தற்போது 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறினார். 

வாங்கும் கடனில் மூலதன செலவு அதிகமாக இருக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கு மாறாக மூலதன செலவு குறைவாக இருக்கிறது எனவும், அந்த அளவிற்கு கடன் வாங்கிய மாநிலம் தமிழகமாக தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 2018-19 ம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் தமிழக அரசின் நிலுவை கடன் 3.54 லட்சம் கோடி என்றும், இது வரும் நிதியாண்டில் 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

பல மாநிலங்கள், நம்மை விட அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக கூறிய அவர், அதன்படி மேற்கு வங்கம் 3.94 லட்சம் கோடி, உத்தரபிரதேசம் 4.4 லட்சம் கோடி, மகாராஷ்டிரா 4.61 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 25 விழுக்காட்டிற்குள் கடன் அளவு இருக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் கடன் அளவு 23.2 விழுக்காடு என்ற அளவில் தான் உள்ளதாகவும், மத்திய அரசின் கடன் 47.30 விழுக்காடாக இருப்பதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்