தமிழக காங்., தலைவராக அழகிரி இன்று பொறுப்பேற்பு...

தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி இன்று பொறுப்பேற்கிறார்.
தமிழக காங்., தலைவராக அழகிரி இன்று பொறுப்பேற்பு...
x
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றி விட்டு புதிய தலைவராக அழகிரியை, கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி நியமித்தார். இதுபோல, செயல் தலைவர்களாக வசந்தகுமார் உள்ளிட்ட 4 பேரையும் ராகுல் நியமித்தார். இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தலைவராக அழகிரி பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருடன், செயல் தலைவர்களான வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், கட்சியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொள்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்