தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.வுடன் பேசவில்லை - முத்தரசன்
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தற்போது வரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரம் நம்பகத்தன்மையை இழந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் இதனை தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து, தற்போது வரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
Next Story