"பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு" - பாமக நிறுவனர் ராமதாஸ்

"பெண் குழந்தைகள் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துக"
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வருவதால் உடனடியாக பெண் குழந்தைகள் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 10 புள்ளி 16 சதவீதம்  குறைந்துள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே தொட்டில் குழந்தைகள் திட்டம், கல்விக் கட்டண சலுகை உள்ளிட்ட பெண் குழந்தைகள் ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்