தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை - தலைமைச் செயலாளர் டி.ஜி.பி பங்கேற்பு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் , தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலி காட்சிமூலம் ஆலோசனை நடத்தினார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை - தலைமைச் செயலாளர் டி.ஜி.பி பங்கேற்பு
x
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் , தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலி காட்சிமூலம்  ஆலோசனை நடத்தினார்.தமிழகத் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்ற  இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,  வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை சட்டம் ஒழுங்கு பிரச்னை, தேர்தல் நடத்துவதற்கு தயார் நிலை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.ஆலோசனைக்கு பின்னர் பேசிய அதிகாரிகள்,திட்டமிட்டபடி வரும் 31 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்  என்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் தேர்தல் பணிகளில் எந்தவித பாதிப்புமில்லை  என்பதுடன் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றும் கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்