போராட்டம் - பேச்சுவார்த்தை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

போராடும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டம் - பேச்சுவார்த்தை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  9 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், பல்வேறு கட்டங்களாக  போராட்டங்களை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

*  அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினைச் சேர்ந்த நிர்வாகிகளை  நள்ளிரவில் கைது செய்யும் அதிமுக அரசின்  நடவடிக்கை கண்டனத்திற்கு உரியது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* போராடுபவர்களை அழைத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தகுந்தபடி பரிசீலனை செய்வதற்குப் பதில், "தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது", "பணி நீக்கம் செய்வோம் என்று மிரட்டுவது"  போராட்டத்தை மேலும் தூண்டிவிடும் செயல் எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

* பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்ற கடமையை  மறந்து  மிரட்டினால் எல்லாம் பணிந்து விடுவார்கள் என்று தலைமைச் செயலாளரும், முதலமைச்சரும் நினைப்பது நிர்வாக அவலட்சணம் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

* நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக விடுதலை செய்து , அவர்களை அழைத்து உடனடியாக முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்