"பணத்துக்காக தவறானவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்" - கனிமொழி
"நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெறும்" - கனிமொழி
உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தாததால், கிராமங்களில் சிறிய பிரச்சினை கூட, தீர்க்கப்படாமல் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள வெங்கடேஷ்வரபுரத்தில் திமுக சார்பில் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அவர், அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பணத்துக்காக தவறானவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள், பின்பு துன்பப்படுவதாக கூறிய கனிமொழி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெறும் என்றார்.
Next Story