"கோட்டை அமீர் பதக்கம் வழங்காமல் புறக்கணிப்பு" - தமிழக அரசுக்கு திமுக கண்டனம்

"கோட்டை அமீர் பதக்கம்" இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் யாருக்கும் வழங்கப்படவில்லை என்று திமுக பொருளாளர் துரை முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோட்டை அமீர் பதக்கம் வழங்காமல் புறக்கணிப்பு - தமிழக அரசுக்கு திமுக கண்டனம்
x
மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க , முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி அறிவித்து , இரண்டாயிரம் ஆண்டிலிருந்து இதுவரை செயல்படுத்தி வந்த "கோட்டை அமீர் பதக்கம்" இந்த ஆண்டு  குடியரசு தின விழாவில்  யாருக்கும் வழங்கப்படவில்லை என்று திமுக பொருளாளர் துரை முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட ஒருவரை "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கு" தேர்வு செய்து - அவருக்கு அந்த பதக்கத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்