"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்"

உச்சநீதிமன்றத்தில் தடை பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தல்
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்
x
மேகதாது அணைக்கு உடனடியாக தடை பெறுமாறு தமிழக அரசை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில், மேகதாது தொடர்பாக தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு, பதில் வரவில்லை எனவும் கர்நாடகா கூறியிருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கருத்தை கேட்காமல் தயாரித்த அறிக்கையை எப்படி பெற்றுக் கொண்டீர்கள்..? என இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை கேள்வி கேட்கவில்லை என விமர்சித்துள்ள ஸ்டாலின்,  இனியும் தாமதிக்காமல், விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதே வாதத்தை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தடைபெற வேண்டும் என்றும் ஸ்டாலின் அதில் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்